This Blog is Dedicated to our Founder / President / Grand Master Hanshi Rajaguru T. Ravindran for his Devotion and True Dedication in the Science of Martial Arts since 1965. ((With Love & Respect - Students of Grand Master Hanshi Rajaguru T. Ravindran)).
Saturday, 5 November 2016
Cemetery Holy Day (Nov 2nd, 2016)
Grand Master Rajaguru paid his Respect to Late Dai Sensei Dr. Moses Tilak
on Cemetery Holy Day (November 2nd, 2016)
இன்று “கல்லறை நாள்” என்று அழைக்கப்படும் , இந்நாளில் நமது இந்தியாவின் மிகச்சிறந்த கராத்தே தலைமை ஆசிரியரும், (Grand Master) இந்தியா முழுவதும் தற்காப்புக் கலையாகிய கராத்தே கலையை நிலைக்க வைத்து நிரந்தரமாக்கியவரும், பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு கராத்தே கலையை இந்தியா முழுவதிலும், மற்றும் சர்வதேச அளவிலும் பயிற்றுவித்தவரும், என்னுடைய ஆத்மாவின் ஒப்பற்ற நட்பிற்குரியவரும், எனது மூத்த சகோதரரும், என் வாழ்வில் நட்பிற்கு ஒளிமயமாக விளங்கி, அவர் மீது நான் வைத்த எல்லையில்லா நட்பிற்கு சில உரிமைகளையும், சந்தோஷங்களையும் நல்கி, என்னுடன் இன்றுவரை ஆத்ம வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது Dai Sensei டாக்டர் மோஸஸ் திலகன் ஐயா அவர்களின் கல்லறையில் எனக்கு இன்று அவர் ஆத்மா அளித்த நட்பின் பணி என் ஆத்மாவை நிம்மதியடையச் செய்தது.
எனக்கு என்னுடைய இந்த 50 ஆண்டு கால தற்காப்புக் கலை வாழ்வின் “பொன்விழா” ஆண்டை முன்னிட்டு அவருடைய புனிதமான அன்பு, என் மீது வைத்த உயர்ந்த நட்பிற்கு அவர் என்னுடைய இந்த பொன் விழா ஆண்டிற்காக எனக்கு அளித்த ஆசியாக உணர்ந்து பூரிப்படைகிறேன். அண்ணாரின் குடும்பத்திற்கும், அனைத்து தற்காப்புக்கலை குடும்பத்திற்கும் அவரின் அருளும், ஆசியும் என்றென்றும் அமைவதாக, என்று வேண்டிக்கொண்டு, இந்நாளில் அவரின் கல்லறையில் மலர்களால் பூஜித்து, மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

Subscribe to:
Posts (Atom)